நமக்குத் தூக்கம் வராமலிருக்கையில்
இவ்விரவுக்குப்
பைத்தியம் பிடித்துவிடுதல் உசிதம்.
நமக்குப் பைத்தியம் பிடித்து
விடுதல்
இவ்வுலகுக்கு நன்மை.
தவிர்க்கமுடியா
தவிப்பின் நனவில் உள்ளத்து
உடன்
இருப்பவர்கள் எல்லாம் விழித்தவாறே
உடனிருத்தல் நலமே நலம்.
பிரக்ஞை தெளியுமுன் வாக்குமூலங்களைக்
கொடுத்துவிடுதல்
உயிரின் விருப்பமாயும்
பேசும் வார்த்தைக்கு வருந்துதல்
பிழைப்பின் வருத்தமாகவும் இருக்கிறது.
பேதலிப்பின் நிலைகள் உணர்ந்த
பின்னும்
உண்மையறியாமல் தெளிவை
நிலை நாட்ட விழைகிறது
விடுபடாத ஒன்று.
அனைத்திலிருந்தும் விடுபடாத ஒன்று
ஒன்றிலிருந்தும் கூட
விடுபடப் போவ தில்லை.
Friday, June 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அண்ணே அருமை
என் மனதை பிரதிபலிக்கிறது அப்படியே
அருமை :-).
விடுபடாமல் இருக்கும் வரை தான் விடுபடாமல் இருப்போம் நாம் .
கவித சூப்பரு... ஆனா நூறாவது பதிவுக்கு நீங்க இன்னும் 14 பதிவு எழுதணும் :))
மிகவும் அருமையானக் கவிதை . பகிர்வுக்கு நன்றி
Post a Comment